
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கொவிட் -19 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காத்தான்குடிப் பிரதேசத்தில் கடந்த 40 நாட்களாக அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டதன் பின்னர் இலங்கை போக்குவரத்துச் சபையினால் தூர இடங்களுக்கு சேவைகளில் ஈடுபடும் பஸ் சேவைகள் கடந்த 11ஆம் திகதி முதல் மீண்டும் தமது பொதுப்போக்குவரத்து சேவைகளை வழமை போல் ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில், காலை 7.45 மணிக்கு கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கும், காலை 6 மணிக்கு காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கும், மதியம் 1 மணிக்கு காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கும், இரவு 10 மணிக்கு காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கும், காலை 7 மணிக்கு காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கும், காலை 5 மணிக்கு காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கண்டிக்கும், மதியம் 12.30 மணிக்கு காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து பதுளைக்கும், காலை 7.30 மணிக்கு காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து நுவரெலியாவுக்கும், காலை 6 மணிக்கு காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து பாணந்துறைக்கும், காலை 6 மணிக்கு கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து திருகோணமலைக்கும், காலை 10.30 மணிக்கு கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து திருகோணமலைக்கும் பஸ்கள் சேவையில் ஈடுபடும்.
மேற்படி பஸ்கள் மேலே குறிப்பிட்ட இடங்களிலிருந்து காலை 5.30 மணிக்கு கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கல்முனைக்கும், மதியம் 2.15 மணிக்கு கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து காத்தான்குடிக்கும், காலை 10.30 மணிக்கு கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து காத்தான்குடிக்கும், மாலை 7 மணிக்கு கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து காத்தான்குடிக்கும், காலை 7 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து காத்தான்குடிக்கும், மதியம் 1.50 மணிக்கு கண்டி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து காத்தான்குடிக்கும், காலை 7 மணிக்கு நுவரெலியா பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து காத்தான்குடிக்கும், காலை 6 மணிக்கு பாணந்துறை பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து காத்தான்குடிக்கும், மதியம் 1.30 மணிக்கு திருகோணமலை பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கல்முனைக்கும், இரவு 7 மணிக்கு திருகோணமலை பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து காத்தான்குடிக்கும் பஸ்கள் சேவையில் ஈடுபடும்.
அத்தோடு, தினமும் தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்களில் ஆசனப்பதிவு உள்ளிட்ட ஏனைய விடயங்களுக்கு 0652247046 என்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் காத்தான்குடி பஸ் டிப்போ தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அது தொடர்பான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
