அதியுயர் விருது பெற்ற மலையக மாணவி!!!



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35ம்
பட்டமளிப்பு விழாவில் மாத்தளையைச் சேர்ந்த மாணவி முனியப்பன் துலாபாரணிக்கு அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கு சிரேஸ்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கமே வழங்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாணவி துலாபாரணியின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் எனவும், மிகுந்த வறுமைக்கு மத்தியில் தாம் கல்வியைத் தொடர்ந்து வருவதாக மாணவி துலாபாரணி குறிப்பிட்டுள்ளார்.

இம்மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை கற்கை நெறியை பூர்த்தி செய்து அதே பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதியுயர் விருது பெற்ற மலையக மாணவி!!! அதியுயர் விருது பெற்ற மலையக மாணவி!!! Reviewed by Editor on February 25, 2021 Rating: 5