(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று பிரதேசத்தில், பாலியல் ஆரோக்கியத்தை ஊக்குவித்தல் மற்றும் பாலியல் ரீதியாக கடத்தப்படும் நோய்களிலிருந்து முற்காத்தல் ஆகிய செயற்பாடுகளில், இளைஞர்களின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கில், அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களின் பிரதிதிநிதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (19) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி செயலாளர் ஏ.கே.றொசின் தாஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாரை மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர், அக்கரைப்பற்று இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் Sri Lanka Unites அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வளவாளராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் வைத்தியர் எம்.என்.எம்.தில்ஷான் (Mo/IC,STD/HIV control program) கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
Reviewed by Editor
on
February 20, 2021
Rating:


