(றிஸ்வான் சாலிஹூ)
சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச்செய்ய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை இன்று (22) திங்கட்கிழமை சந்தித்து பேசியதன் விளைவாக சாதகமான முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் தெரிவித்துள்ளார்.
இதன் போது சம்மாந்துறை போக்குவரத்து சபையை பற்றி தெளிவாக எடுத்துரைத்த போது, சம்மாந்துறை போக்குவரத்து சபை இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தெளபீக் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
February 22, 2021
Rating:
