'சௌபாக்கிய கடன் திட்டம்' தின் கீழ் கிராமிய கூட்டுறவு வங்கி மற்றும் மாகாண வங்கி சங்கத்தினால் ஊவா மாகாணத்தில் எதிர்வரும் பருவ நெல் கொள்வனவுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இதற்காகக் குறித்த வங்கியிலிருந்து 6.5 வீத வட்டியில் கடன் வழங்கப்படும் அதேவேளை, கூட்டுறவுத் திணைக்களத்தினால் 2.5 வட்டி மானியம் வழங்கி, நெல் கொள்வனவு செய்யும் கூட்டுறவுச் சங்கத்திற்கு 4% வட்டியில் கடன் தொகையொன்றை வழங்குவது இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும் என்று மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் வர்த்தக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன, கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அலகியவன்ன, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாமர சம்பத் தசநாயக, மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி. ஆர்.எம்.எஸ்.டீ ரத்நாயக்க, மாகாண கூட்டுறவுச் அபிவிருத்தி ஆணையாளர் திரு சி. அத்தரவத்த உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பருவ நெல் கொள்வனவுக்கு காசோலை வழங்கல்!!
Reviewed by Editor
on
February 22, 2021
Rating:
Reviewed by Editor
on
February 22, 2021
Rating:


