இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்ற பிம்ஷானி ஜாசிங்காரச்சியின் தொழில்ரீதியான உரிமைகள் மற்றும் தொழிலின் பாதுகாப்புக்காக தமது ஒன்றியம் கட்சி பேதமின்றி முன்னிற்பதாகவும், அவருக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவதாவும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பணிப்பாளராக பணியாற்றிய பிம்ஷானி ஜாசிங்காரச்சியின் நியமனத்துக்கு சவால் விடுப்பதை கண்டிப்பதாக ஒன்றியத்தின் தலைவியும், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே இன்று (18) வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி விஜேரத்ன மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியுமான குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
Reviewed by Editor
on
February 18, 2021
Rating:
