இன்று (15) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 6 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் பதுளை அசேலபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சிவனேசன் வருன் பிரதீப் எனும் 6 வயதுடைய இந்த மாணவன் பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் இணைவதற்காக அவருடைய பாட்டி மற்றும் இரட்டை சகோதரருடன் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கனரக வாகனம் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் பாடசாலை சென்ற மாணவன் விபத்தில் பலி!!!
Reviewed by Editor
on
February 15, 2021
Rating:
