(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று எப்.எஸ்.சீ விளையாட்டு கழகம் நடாத்திய "FSC Trophy 2021" உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பள்ளிக்குடியிருப்பு முஹம்மதியா விளையாட்டு கழகத்தை எதிர்த்தாடிய அக்கரைப்பற்று FSC விளையாட்டு கழகம் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் இச்சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை கழகத்தின் தலைவர் நிஹால் முஸ்தபா தலைமையில் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்திலேயே FSC அணியின் வீரர் ஒரு கோலை புகுத்தி தமது அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
FSC விளையாட்டு கழகம் கடந்த ஆண்டும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன், இவ்வருடமும் (2021) அதே அணி தான் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது அந்த கழக வீரர்களின் சிறந்த விளையாட்டே இதற்கு காரணமாகும்.
அக்கரைப்பற்றின் மூத்த புகழ் பூத்த உதைபந்தாட்ட வீரர்கள் இறுதிப் போட்டியில் அதிதிகளாக சங்கமித்ததோடு, போட்டியின் நடுவராக அப்துல் மாஜீத் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
