உலக பேடன் பவன் தின மற்றும் மரநடுகை நிகழ்வு!!!


(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று - கல்முனை சாரணர் சங்கத்தினால், உலக பேடன் பவல் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட மர நடுகை நிகழ்வு இன்று (22) திங்கட்கிழமை, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வளாகத்தில் கல்லூரி அதிபர் ஜனாப் முஜீன் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலையின் உதவி அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் சாரணர் சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுதலோடு மிகவும் சிறப்பாக இந்நிகழ்வு இடம்பெற்றது.




நிகழ்வில் விசேட அம்சமாக சாரணர் சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் கல்லூரி வளாகத்தில் மரநடுகையும் இடம்பெற்றது.

உலக பேடன் பவன் தின மற்றும் மரநடுகை நிகழ்வு!!!  உலக பேடன் பவன் தின மற்றும் மரநடுகை நிகழ்வு!!! Reviewed by Editor on February 22, 2021 Rating: 5