
(றிஸ்வான் சாலிஹூ)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளராகவும், செயற்திட்ட பணிப்பாளராகவும் (GCWWMIIP) கடமையாற்றிய பொறியியலாளர் எஸ்.ஏ.றசீட் அவர்கள், மேலதிக பொது முகாமையாளராக (Consumer Management &Asset Management) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதான காரியாலயத்தில் நேற்று (02) செவ்வாய்க்கிழமை இவருக்கான பதவியுயர்வு கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறையைச் சேர்ந்த பொறியியலாளர் றசீட், நீர் வழங்கல் சபையின் பிராந்திய முகாமையாளர், உதவிப் பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர் மற்றும் செயற்திட்ட பணிப்பாளர் போன்ற உயர் பதவிகளில் இருந்து மேலதிக பொது முகாமையாளர் பதவி உயர்வு கிடைத்திருப்பது இவரின் சேவைக்கு கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
