
(முஹம்மட் அஸ்மி)
மன்முனை தென் எருவில் பற்று -களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் முகநூல் ஊடாக அவதூறாக பேசி கொலை அச்சுறுத்தல் விடுத்து பகிரங்க காணொளி வெளியிட்டமைக்கு எதிராக பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (16) செவ்வாய்க்கிழமை நண்பகல் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தை பிறப்பிடமாக கொண்டு தற்போது சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்ற மார்க்கண்டு தேவராசா என்பவரால் மன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவரை இலக்கு வைத்து கடந்த 14ஆம் திகதி வெளியிடப்பட்ட காணொளி தொடர்பிலேயே குறித்த நபருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி பிரதேச கிராம உத்தியோகத்தர் சங்கத்தினால் மேற்படி கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
