
இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அகிரா பயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்பு வாகனங்களை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு இன்று (16) செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த வாகனங்கள் 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அன்பளிப்பு செய்த முதல் தொகுதி உபகரணங்கள் ஆகும்.
இந்நிகழ்வில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.விக்கிரமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜப்பான் இலங்கைக்கு வாகனங்கள் அன்பளிப்பு!!!
Reviewed by Editor
on
February 16, 2021
Rating:
