
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்காக ஜப்பான் அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கட்டிடத் தொகுதியை திறப்பு விழா இன்று (05) வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பல்கலைகழக விவசாய பீடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் ஜி.எல் பீரீஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் ஶ்ரீ சற்குணராஜா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், கல்வி அமைச்சின் செயலாளர், ஜப்பான் அரசின் பிரதிநிதிகள், பல்கலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலர் Covid - 19 சுகாதார நடைமுறைக்கு அமைவாக கலந்து கொண்டனர்.
