
(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கை கிரிக்கெட் துறைக்கான புதிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒன்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ அவர்களினால் இன்று (05) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அரவிந்த டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவில் இலங்கை அணியின் முன்னாள் 04 பிரபலங்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரோஷன் மஹானாமா, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
விளையாட்டு ஆலோசகர், அமைச்சு அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஆகியோருக்கு விளையாட்டின் வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கை இந்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
