வொல்பெகீயா பக்டீரியாவை சூழலில் விடுவிக்கும் பணி மீண்டும் ஆரம்பம்!!!


கொவிட் 19 காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த உலக நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி பொது இடங்களை இலக்காகக் கொண்டு வொல்பெகீயா பக்டீரியாவை (Wolbachia)  கொண்ட நுளம்புகளை சூழலுடன் விடுவிக்கும் வேலைத்திட்டம் மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோயை இல்லாதொழிக்கும் நோக்குடன் கொழும்பு மாநகர சபை மற்றும் நுகேகொட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் ஒரு செயற் திட்டமாக ஆரம்பித்து நாடு பூராகவும் இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது.


வொல்பெகீயா பக்டீரியாவை சூழலில் விடுவிக்கும் பணி மீண்டும் ஆரம்பம்!!! வொல்பெகீயா பக்டீரியாவை சூழலில் விடுவிக்கும் பணி மீண்டும் ஆரம்பம்!!! Reviewed by Editor on February 12, 2021 Rating: 5