அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி சர்வதேச அணுகுமுறையை பின்பற்றுகிறது - வழிகாட்டல் உத்தியோகத்தர் பிஸ்ரின்
(றிஸ்வான் சாலிஹூ)
2021 கல்வியாண்டுக்கான மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வதற்க்கான நேர்முகப் பரீட்சை அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.
வழமையான மரபுசார் நேர்முக தேர்வு அணுகுமுறையிலிருந்து விலகி, யதார்த்த பூர்வமானதும் உளவியல் ரீதியானதுமான அணுகுமுறையின் மூலம் மாணவர்கள் பாடநெறிகளுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர் என்று அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.பிஸ்ரின் தெரிவித்துள்ளார்.
இதற்காக, தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மத்திய நிலையம், சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படுகின்ற Psychometric Assessment யினை பயன்படுத்துகின்றது.
இதன் மூலம் விண்ணப்பதாரர்களின் உளவியல் அம்சங்கள், 6 விடயங்களை மையப்படுத்தி அளவீடு செய்யப்பட்டு பொருத்தமான துறைகளுக்கு வழிகாட்டப்படுகின்றனர்.
இந் நடைமுறை மூலம் இடைவிலகல்களை குறைக்க முடிவதோடு தொழில் உலகின் போக்குகளை விளங்கி பயிற்சி நெறிகளை தெரிவு செய்யும் மாணவர் சமூகமொன்றினை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
