“கலைஞர் சுவதம் விருது”பெற்ற கவிதாயினி ஹைறுன்னிஸா!!!



(பி.எம்.எம்.ஏ.காதர்)  

மருதமுனையைச் சேர்ந்த இளம் கவிதாயினி எம்.ஐ.ஹைறுன்னிஸா “கலைஞர் சுவதம் விருது” பெற்றார். கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஊடாக கல்முனை பிதேச செயலக கலாச்சார அதிகார சபையின் ஏற்பாட்டில் புதன்கிழமை (24) பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற “கலைஞர் சுவதம் விருது” வழங்கும் நிகழ்வின் போதே இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மருதமுனையின் கலை, இலக்கியத் தளத்தில் தடம் பதித்துவரும் புதிய எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை என்பவற்றைப் பத்திரிகைகளுக்கு எழுதிவருகின்றார். 

எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இதழியல் கற்கை நெறியை கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

“கலைஞர் சுவதம் விருது”பெற்ற கவிதாயினி ஹைறுன்னிஸா!!! “கலைஞர் சுவதம் விருது”பெற்ற கவிதாயினி ஹைறுன்னிஸா!!! Reviewed by Editor on February 25, 2021 Rating: 5