
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இருவர் அவுஸ்திரேலியாவில்பேருந்து சாரதிகளாக தொழில் புரிவதாக இருக்கும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சுராஜ் ரன்தீவும், சிந்தக ஜெயசிங்கவும் மெல்பேர்னில் உள்ள பிரான்சை தளமாக கொண்ட டிரான்ஸ்டெவ் என்ற நிறுவனத்தில் பேருந்து சாரதிகளாக பணிபுரிகின்றனர். இவர்கள் பேருந்து சாரதிகளாக பணியாற்றுவதுடன் உள்ளுர் கழகமொன்றிற்காக கிரிக்கெட்டும் விளையாடி வருகின்றனர்.
1200க்கும் மேற்பட்டவர்கள் சாரதிகளாக பணியாற்றும் டிரானஸ்டெவ் என்ற நிறுவனமே இவர்களை சாரதிகளாக சேர்த்துக் கொண்டுள்ளது.
சுராஜ் ரன்தீவ் தனது சாரதி தொழிலுக்கு அப்பால் உள்ளுர் கழகமொன்றின் கிரிக்கெட் நடவடிக்கைகளில் தீவிர ஆர்வம் காட்டிவருகின்றார், மெல்பேர்னில் சமீபத்தில் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்கொண்ட வேளை இந்திய அணியை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை ரன்தீவ் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
February 28, 2021
Rating: