பொலிஸ் ஜீப் - முச்சக்கரவண்டி விபத்து...

வாரியபொல - கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் ஜீப் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸ் ஜீப் - முச்சக்கரவண்டி விபத்து... பொலிஸ் ஜீப் - முச்சக்கரவண்டி விபத்து... Reviewed by Editor on February 28, 2021 Rating: 5