இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு வர்த்தக நிலையங்கள் ,அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ,வாகனங்களில், தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றதை காண முடிகிறது.எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு இனம், மதம்,மொழி,வேறு பாடுகளை விசேட மத வழிபாடுகள் இப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் சுதந்திர தினத்தன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் ,தேசியக் கொடியை ஏற்றுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை,அக்கரைப்பற்று ,மத்தியமுகாம்உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் தேசிய கொடிகள் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(மாவட்ட ஊடகப் பிரிவு)
அம்பாறை மாவட்டத்தில் தேசிய கொடி விற்பனை மும்முரம்
Reviewed by Editor
on
February 03, 2021
Rating:
Reviewed by Editor
on
February 03, 2021
Rating:



