முதுநிலை சட்டத்தரணி தாஹா செய்னுதீன் காலமானார்

 

 

அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும் கல்முனையினை வதிவிடமாகவும் கொண்ட சிரேஸ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் இன்று (05) வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் காலமானார். 

இவரது ஜனாசா நல்லடக்கம் இன்றிரவு கொழும்பு -07 ஜாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இலங்கை சட்டக் கல்லுாரியில் இருந்து சட்டத்தரணியாக வெளிவந்தவர். சுமார் 6 தசாப்த காலம் வரை அவர் பணிபுரிந்தார். ஆரம்ப காலங்களில் அவர் குற்றவியல் வழக்குகளிலும் பின்பு குடியியில் வழக்குகளிலும் ஆஜராகி கிழக்கிலங்கையில் புகழ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


(நன்றி - Ceylon 24)


முதுநிலை சட்டத்தரணி தாஹா செய்னுதீன் காலமானார் முதுநிலை சட்டத்தரணி தாஹா செய்னுதீன் காலமானார் Reviewed by Editor on February 05, 2021 Rating: 5