(எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்)
காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவியில் வியாழக்கிழமை (04) வாவியில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞனின் ஜனாஸா நாவற்குடா வாவியில் இன்று (06) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சந்தொடுவாய் 19ஆம் வட்டாரம் ஹிழுறியா ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் மீரா முகைதீன் முனாஸ் வாவியில் தவறி விழுந்து காணாமல் போயிருந்தார்.
குறித்த இளைஞன் வாவியில் நிறுத்தப்பட்டிருந்த ஆழ்கடல் மீன்பிடி படகில் காணப்பட்ட வலையை ஒழுங்கு செய்வதற்காக சிறிய தோணி ஒன்றில் படகை நோக்கி சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
இளைஞனின் ஜனாஸா நாவற்குடா வாவியில் கண்டெடுப்பு
Reviewed by Editor
on
February 06, 2021
Rating:
