உதைப்பந்தாட்ட லீக் அங்கத்துவ கழகங்களின் ஒன்றுகூடல்!!!


அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட லீக்கின் எதிர்காலத் திட்டம் தொடர்பாக ஆராயும் ஒன்று கூடல் இன்று (27) சனிக்கிழமை அட்டாளைச்சேனை முல்லைத்தீவு தென்னந் தோப்பில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினர் அஸ்மி அப்துல் கபூர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அறுகம்பை கழகம், உதய சூரியன், இறக்காமம் ஐ.ஆர்.எப்.சீ, சோபர் கழகம், லக்கி விளையாட்டுக் கழகம், நியு ஸ்டார், புளு இலவன், ஹிரோஸ், ரை ஸ்டார், பதூர் விளையாட்டு கழகம், ஹிஜ்ரா விளையாட்டு கழகம், ஏ. கே.பி. ஆகிய கழகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

லீக்கினால் நடாத்தப்படுகின்ற சுற்றுப் போட்டிக்கான நேர அட்டவணையும் இதன்போது தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதைப்பந்தாட்ட லீக் அங்கத்துவ கழகங்களின் ஒன்றுகூடல்!!! உதைப்பந்தாட்ட லீக் அங்கத்துவ கழகங்களின் ஒன்றுகூடல்!!! Reviewed by Editor on February 27, 2021 Rating: 5