
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, டீன்ஸ் வீதியைச் சேர்ந்த ஹயறூஸ் அஸீஸ் (சவூதீன்) இன்று (06) சனிக்கிழமை அதிகாலை கல்முனை ஆதார வைத்தியசாலையில் காலமானார்.
ஒரு வார காலமாக சுகயீனமுற்று கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், சிறுவயது முதல் தனது ஐவேளை தொழுகையை சரியான நேரத்தில் நிறைவேற்றுபவராகவும், பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுடன் அன்பாகவும் பாசமாகவும் பழகக்கூடியவராவார்.
இவர் அஸீஸ் ஓடாவியாரின் அன்பு மகனும், அஜ்வர் அஸீஸ் அவர்களின் சகோதரரும், ஆட்டோ சிறாஜ் அவர்களின் மச்சினனும் ஆவார்.
இவரின் ஜனாஸா இன்று காலை 9.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறைவன் அன்னாரின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து அவருடைய நல்லமல்களை பொருந்தி அவரை நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்ப்பானாக ஆமீன்.
