இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து விசாரிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த போது மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை, சம்பந்தப்பட்ட ஆவணங்களை பிரதேச செயலகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்திருந்தார்.
அதற்கமைவாக பாடசாசை அதிபர்கள் பிரதேச செயலகத்திற்குச் சென்று மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையர் நாயகம் வியானி குணதிலக கேட்டுக்கொண்டார்.
சில மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக ஆட்பதிவு திணைக்களம் வழங்கிய கடிதமும் க.பொ.த. சாதாரண தர தேர்வுக்கு தோற்றுவதற்கு செல்லுபடியாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(News.lk)
Reviewed by Editor
on
February 19, 2021
Rating:
