காத்தான்குடி நகர சபை பசுமை நகர் செயற்திட்டத்திற்கு தெரிவு!!!

(றிஸ்வான் சாலிஹூ)

கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களமும் ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும் (UNDP) இணைந்து செயற்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை கட்டியெழுப்பும் செயற்திட்டமானது, இலங்கையில் உள்ளூராட்சி முறையை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி மற்றும் British Council உள்ளிட்ட அபிவிருத்தி பங்காளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படும் பாரிய நிகழ்ச்சித் திட்டமாகும். 

அதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை வலுப்படுத்துகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட தெரிவுப் போட்டியில் காத்தான்குடி நகர சபையானது பசுமை நகர் (Green City)  செயற்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று காத்தான்குடி நகர பிதா எஸ்.எச்.எம்‌.அஸ்பர் தெரிவித்துள்ளார்.



குறித்த பெருந்திட்டத்தினை (Master Plan) தயாரிப்பதற்கான ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் நிகழ்வு காத்தான்குடி பீச் வே   மண்டபத்தில் நடைபெற்றது.


Green City செயற்திட்டத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்படதோடு எதிர்கால வேலைத்திட்டம் தெடர்பாகவும் இதில் ஆராயப்பட்டது.



இந்நிகழ்வில் காத்தான்குடி நகரமுதல்வர், நகரசபை உறுப்பினர்கள்,உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட உயர்அதிகாரிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், துறைசார் நிபுணர்கள், நகரசபை செயலாளர், கணக்காளர் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


காத்தான்குடி நகர சபை பசுமை நகர் செயற்திட்டத்திற்கு தெரிவு!!! காத்தான்குடி நகர சபை பசுமை நகர் செயற்திட்டத்திற்கு தெரிவு!!! Reviewed by Editor on February 24, 2021 Rating: 5