
ஒருவரது பாலியல் நடத்தை என்பது இரகசியமானது,தனக்கிருக்கும் பாலியல் உறவுகள் பற்றி யாரும் யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை!
எனினும், தவறான மற்றும் பாதுகாப்பற்ற பாலியல் நடத்தைகள், தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்குவதோடு, பாலியல் ரீதியாக கடத்தப்படும் நோய்களையும் நமக்கு உருவாக்கவல்லது!
பாலியல் ரீதியாக கடத்தப்படும் பல நோய்கள் காணப்படினும், HIV ஆனது அவற்றுள் ஆபத்தானதும், முற்றாக குணப்படுத்த முடியாததுமாகும்!
எனினும் HIV தொற்று ஏற்பட்ட ஒருவரை அந்நோய் தீவிரமடைவதிலிருந்து முற்றாகப் பாதுகாப்பதற்கும், அவரை சாதாரண மனிதனாக வாழச் செய்வதற்குமான மருந்துகள் உள்ளன!
எங்கே செல்வது?
நமது பாலியல் நடத்தைகள் பாதுகாப்பற்றவை அல்லது பலருடானவை என நாம் கருதுமிடத்து, இலவசமாகவே HIV மற்றும் இதர பாலியல் ரீதியாக கடத்தப்படும் நோய்களுக்கான பரிசோதனைகளை நம்மால் மேற்கொள்ள முடியும்!
அதற்கு நாம் அருகிலிருக்கும் STD கிளினிக்கை நாட முடியும்! இங்கே உங்களது இரகசியத் தன்மை நூறு வீதம் பாதுகாக்கப்படுவதோடு, எவ்வித ஆலோசனைகளையும் தைரியமாக கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியும்!
இத்தகைய STD கிளினிக்களுக்கு செல்வதற்கு தயக்கம் அல்லது கூச்சசுபாவம் உடையவர்கள், இக் கிளினிக்களின் தொலைபேசி இலக்கங்களூடாகவோ அல்லது சமுக வலைத்தளப் பக்கங்கள் ஊடாகவோ தொடர்பு கொள்ளவும் முடியும்.
அதையும் தாண்டி தன் அடையாளத்தைக் காட்டிக் கொள்ள விரும்பாதவர்களெனின், அதற்கென்றே அரசு ஒரு இணையதளத்தை உருவாக்கியும் உள்ளது. Know4sure எனும் இவ்விணையதளத்தினை Google இல் தேடி நீங்கள் அணுக முடியும். இவ்விணையதளத்தில் மூன்று மொழிகளிலும் உங்களுக்கு சேவையைப் பெற முடியும். அத்தோடு உங்கள் தொடர்பிலக்கத்தையோ, உங்கள் email முகவரியையோ இந்த இணையம் உபயோகிக்க மாட்டாது!
இதில் உங்கள் HIV அபாயம் என்ன என்பதை ஒரு சில கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அத்தோடு HIV பரிசோதனைகளையும் வீட்டிலிருந்தவாறே பெறவும் வாய்ப்புகள் உண்டு! (இப்போதைக்கு இச் சேவைகள் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வழங்கப்படினும், விரைவில் அவை நாடுதளவிய ரீதியில் விஸ்தரிக்கப்படும்!)
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை
கல்முனை.
