ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற கஸ்ஸாலி சேர் கெளரவிக்கப்பட்டார்!!!

 


(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் ஜுனியர் கல்லூரியில் சிரேஷ்ட ஆசிரியராக கடமையாற்றி வந்த ஆசிரியர் எம். ஏ. கஸ்ஸாலி சேர் அவர்கள் 2021.02.03ஆம் திகதியிலிருந்து தனது 33 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

அக்/அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியின் அதிபர் எஸ்.றினோஸ்டீன் தலைமையில் புதன்கிழமை (03) மாலை, பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஏ.ஜீ.பஸ்மீல் கலந்து கொண்டு சிறப்பித்தார்.



இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள், ஓய்வு பெற்று செல்லும் ஆசிரியரின் 33 வருட சேவைக்கால நினைவுகளை மீட்டுவதாக அவர்களின் உரை அமைந்ததுடன் 'நான் கண்டவை' என்ற தலைப்பில் சக ஆசிரியர்களால் ஆசிரியர் எம்.ஏ. கஸ்ஸாலி பற்றிய மனதில் பதிந்த சில நினைவுகளை இவர்கள் மலரவிட்டதுடன்,வாழ்த்துப்பா வாசித்து,பொன்னாடை போர்த்தியும் மற்றும் பொற்கிழி வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் விசேட அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். நௌபர்டீன் (ஆங்கிலம்), ஆசிரிய ஆலோசகர் எம்.எல்.ஏ. றாஜி (ஆங்கிலம்) கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. கலீலுல் றஹ்மான், வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ. தாஹிர், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அபுதாஹீர் சேர் (ஆரம்பப் பிரிவு), சேர் றாசிக் பரீட் வித்தியாலய அதிபர் எஸ்.எல். றஹீம், வலயக் கல்விப் பணிமனையின் சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுக்குப் பொறுப்பான மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளருமான ஏ.எல். பாயிஸ், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியரின் குடும்பத்தார் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஓய்வு பெற்று செல்லும் ஆசிரியர் கஸ்ஸாலி அவர்கள் தனது 33 வருட கால கல்விப் பணியில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியராக சேவை புரிந்துள்ளதுடன், அவர் மூலம் ஆங்கில கல்வி கற்ற பெரும்பாலான மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் பதவிகளில் பணியாற்றுகின்றார்கள் என்பது அவரின் கல்விச் சேவைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


 

ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற கஸ்ஸாலி சேர் கெளரவிக்கப்பட்டார்!!! ஆசிரியர் சேவையிலிருந்து  ஓய்வு பெற்ற கஸ்ஸாலி சேர் கெளரவிக்கப்பட்டார்!!! Reviewed by Editor on February 05, 2021 Rating: 5