22 ஆண்டுகளுக்குப் பிறகு கல்முனையை தோற்கடித்த அக்கரைப்பற்று



 (ஏ.எல்.றமீஸ்)

மாவட்ட மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் கல்முனை சந்தாங்கேனி பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

இதில் கல்முனை பிரதேச செயலக அணியை எதிர்த்து அக்கரைப்பற்று பிரதேச செயலக அணி மோதியது.

இதில் அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட அணி கல்முனை உதைப்பந்தாட்ட அணிக்கெதிராக இரண்டு கோல்களை புகுத்தி 2021 ம் ஆண்டிற்கான மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

அக்கரைப்பற்றின் உதைப்பந்தாட்ட வரலாற்றில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய போதும் கடந்த 22 வருடங்களாக மாவட்டத்தை வெற்றி கொள்வதற்கு முடியாமல் போய் விட்டது.

இந்த வரலாற்று பின்னணியில் இம் முறை இந்த சாதனையை அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட அணி நிகழ்த்தியிருப்பது பாராட்டத்தக்கதாகும்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு கல்முனையை தோற்கடித்த அக்கரைப்பற்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு கல்முனையை தோற்கடித்த அக்கரைப்பற்று Reviewed by Editor on March 14, 2021 Rating: 5