
(றிஸ்வான் சாலிஹூ, பட உதவி - ஷகீர் இலாஹி)
The Walkers Union ஏற்பாட்டில் "நடைப்பயிற்சியின் ஊடாக ஆரோக்கியம் பேணுவோம்" எனும் தொனிப்பொருளிலான வருடாந்த நிகழ்வுகளை அக்கரைப்பற்று மாநகர நீர்ப் பூங்காவில் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை 6.24 மணியளவில் அக்கரைப்பற்று மாநகர கெளரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் தேசியக் கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார்.
இன்றைய நிகழ்வுகளில் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 500 மீட்டர் சீரான ஓட்டப்போட்டியுடன், பெண்கள் மற்றும் சிரேஸ்ட பிரஜைகளுக்கான நடைப்போட்டிகளும் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று மாநகர நீர்ப்பூங்காவை தளமாக கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட "The Walkers Union" எனும் உடற்பயிற்சியினை ஊக்குவிக்கும் இவ் உன்னதக் குழுமத்தின் ஆரோக்கிய விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மாநகர முதல்வர் பாராட்டிக் கௌரவித்தமை விசேட அம்சமாகும்.
Reviewed by Editor
on
March 14, 2021
Rating:







