30வருட மருத்துவ துறையிலிருந்து ஓய்வுபெற்ற டாக்டர் ஐ.எல்.சித்தீக்!!!


(றிஸ்வான் சாலிஹூ,  பட உதவி- கே. மாதவன்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர். ஐ. எல். சித்தீக் தனது 30 வருடகால மருத்துவ சேவையை நாட்டு மக்களுக்காகவும், அம்பாறை கரையோர பிரதேச மக்களுக்காகவும், குறிப்பாக அக்கரைப்பற்று மக்களுக்காகவும் திறம்பட சேவையாற்றி ஓய்வு பெறும் இவருக்கான பிரியாவிடை நிகழ்வு வைத்தியசாலையில் திங்கட்கிழமை (08) இடம்பெற்றது.

  

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நலன்புரிச்சங்கத் தலைவர் டாக்டர் ஏ சீ. அப்துல் ரஷாக் அவர்களின் தலைமையில், வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம்.ஜவாஹிர் கலந்து கொண்டார்.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அதிதிகள் அனைவரும் ஓய்வு நிலைக்கு செல்லும் வைத்தியரின் சேவை சம்பந்தமான கடந்த கால வரலாற்று சாதனைகளை பேசியதோடு, ஞாபகார்த்த சின்னம், நினைவுப் பரிசில்கள் மற்றும் பொன்னாடை போர்த்தியும் அவர் கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், முன்னாள் வைத்திய அத்தியட்சகர், வைத்தியசாலை நலன்புரி சங்க அங்கத்தவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஏனைய ஊழியர்களும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

30வருட மருத்துவ துறையிலிருந்து ஓய்வுபெற்ற டாக்டர் ஐ.எல்.சித்தீக்!!! 30வருட மருத்துவ துறையிலிருந்து ஓய்வுபெற்ற டாக்டர் ஐ.எல்.சித்தீக்!!! Reviewed by Editor on March 09, 2021 Rating: 5