
(றிஸ்வான் சாலிஹூ)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒலுவில் மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு இன்று (07) ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் அமைப்பாளர் எம்.ஜே.எம்.அஸ்ஹர் தலைமையில் ஒலுவிலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் கலந்து கொண்டார்.

கட்சியின் முக்கியஸ்தர்களான ஓய்வுபெற்ற நீதிபதி சட்டத்தரணி எஸ்.எல்.ஏ. கபூர், பாலமுனை அமைப்பாளர் பி.எம்.ஹுஸைர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.பி.பதுர்டீன், கட்சியின் அட்டாளைச்சேனை பிரமுகர் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ், நிந்தவூர் பிரமுகர் எம்.ரபீக், அக்கரைப்பற்று பிரமுகர் ஏ.எல்.மர்ஜூன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள்,புத்திஜீவிகள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட கட்சியின் முக்கியஸ்தர்களினால் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முதுநபீன் அவர்களுக்கு ஞாபகார்த்த சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
March 07, 2021
Rating: