
(றிஸ்வான் சாலிஹூ)
அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அம்பாறை ஹார்டி தொழில்நுட்பக் கல்லூரியின் குறைபாடுகள் மற்றும் அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான திடீர் விஜயம் ஒன்றினை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான விமலவீர திசாநாயக்க வெள்ளிக்கிழமை (05) மேற்கொண்டிருந்தார்.

ஹார்டி தொழில்நுட்ப கல்லூரியின் பணிப்பாளர் சதாசிவம் தியாகராஜா அமைச்சரை வரவேற்றததுடன், கல்லூரியின் தற்போதைய பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர், ஏனைய அதிகாரிகள், விரிவுரையாளர்கள், மற்றும் பயிற்றுநர்கள் தொடர்பிலான அறிமுகமும் இடம்பெற்றது.
அத்தோடு ஆசிரியர்களின் தற்போதைய பற்றாக்குறை, கல்வி உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளும் இந்த விஜயத்தின் போது பணிப்பாளரினால் அமைச்சருக்கு சுட்டிக் காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
March 07, 2021
Rating:
