பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு...


தாமரைப்பூ பறிக்கச்சென்ற வவுனியா மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் பரந்தாமன் (வயது33) என்ற ஆசிரியர் வவுனியா வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் இன்றையதினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் தாமரைப்பூவினை பறிப்பதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை. இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தேடுதல் மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில், பொலிசாருக்கும் தெரியப்படுத்தினர். நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த ஆசிரியரின் சடலம் குளத்தில் இருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டது.


அவர் ஆலயம் ஒன்றின் தேவைக்காக தாமைரப்பூவை பறிக்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு... பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு... Reviewed by Editor on March 27, 2021 Rating: 5