(றிஸ்வான் சாலிஹூ)
அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவை ஆதரவில் அக்கரைப்பற்று ஷப்னாஸ் ஹாஷிம் எழுதிய " நினைக்கவிதைகளில் அப்பிய சொற்கள்" கவிதை நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 2021.04.02 (வெள்ளிக்கிழமை) மாலை 4.00மணிக்கு அக்கரைப்பற்று-02, பட்டினப்பள்ளி வீதி, மர்யம் சதுக்கத்தில் ( பேஜஸ் புத்தக நிலையம் முன்பாக) உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனிபா இஸ்மாயில் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் வரவேற்புரையை ஓய்வு பெற்ற நில அளவையாளர் ஏ.எல்.முகைதீன் பாவா அவர்களும், நூல் அறிமுகத்தை அரசியல் ஆய்வாளர் சிறாஜ் மஸ்ஹூர் அவர்களும், கவியுரையை ஓய்வு பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரி அக்கரையூர் அப்துல் குத்தூஸ் அவர்களும், கருத்துரை ஆசிரியர் எம். அப்துல் றஸாக் அவர்களும், ஏற்புரை நூலாசிரியரின் தந்தை ஓய்வு பெற்ற முன்னாள் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் அவர்களும், நன்றியுரை ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வி.குணாளன் அவர்களும், சிறப்பதிதியாக இலக்கியவாதி திரு. எஸ். ஜோன்ராஜன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
