முஷாரப் எம்.பியை சந்தித்த பாடசாலை முகாமைத்துவ குழு!!!

(றிஸ்வான் சாலிஹூ)

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஜே.ஏ.ஹஸீப் அவர்களின் தலைமையில் கல்லூரியின் பாடசாலை முகாமைத்துவக் குழு அங்கத்தவர்கள், திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும், அல்-மனார் மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களை கடந்த சனிக்கிழமை (06) சந்தித்தனர்.

இதன் போது, கல்லூரியின் தற்போதைய அவசியமான தேவைப்பாடுகள் பற்றி பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்தியம்பப்பட்டதுடன், தான் கற்ற பாடசாலைக்கு மிக விரைவில் நேரில் வருகை தந்து அதன் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் வை.கே. றகுமான் ஜே.பி அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன், கல்முனை கல்வி வலயத்தின் முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல் அவர்களும் இதன் போது கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


முஷாரப் எம்.பியை சந்தித்த பாடசாலை முகாமைத்துவ குழு!!! முஷாரப் எம்.பியை சந்தித்த பாடசாலை முகாமைத்துவ குழு!!! Reviewed by Editor on March 09, 2021 Rating: 5