அக்கரைப்பற்று ஓய்வுநிலை அதிபர் சரீப் மெளலவி காலமானார்!!


(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒய்வுபெற்ற அதிபர் சரீப் மௌலவி இன்று (09) செவ்வாய்க்கிழமை காலமானார்.

இவர் பொறியியலாளர்களான எஸ். இர்சாத், எஸ்.முர்ஷித் மற்றும் எஸ்.புர்கான் (QS Qatar) ஆகியோரின் அன்பு தந்தையும், வை.பி.இக்பால் சேர், ஜனாப் றஸ்மி (HNB Manager) ஆகியோரின் மாமனாருமாவார்.

அக்கரைப்பற்றில் பெரும்பாலான மாணவர்கள் இவரிடம் கல்வி கற்று தற்போது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் பதவிகளில் பணியாற்றுகின்றார்கள் என்பதையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.

இவர் இந்த கல்வி சமுகத்திற்கு ஆற்றிய அரும்பணிக்கு இறைவன் உயர்தரமான ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக ஆமீன்.

அக்கரைப்பற்று ஓய்வுநிலை அதிபர் சரீப் மெளலவி காலமானார்!! அக்கரைப்பற்று ஓய்வுநிலை அதிபர் சரீப் மெளலவி காலமானார்!! Reviewed by Editor on March 09, 2021 Rating: 5