(சர்ஜுன் லாபீர்)
நாவிதன்வெளி பிரதேச செயலக புதிய கணக்காளராக கே.ரிஸ்வி யஹ்சர் இன்று(04) வியாழக்கிழமை தனது கடமைகளை நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கணக்காளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் நாவிதன்வெளிபிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றவுள்ளர்.
இலங்கை கணக்காளர் சேவை முதலாம் தரத்தினை சேர்ந்த கே.றிஸ்வி யஹ்சர், அக்கரைப்பற்று, மகாஓயா,கல்முனை ஆகிய வலயக் கல்வி அலுவலகங்களில் கணக்காளராகவும், மகாஓயா,பதியத்தலவ ஆகிய பிரதேச செயலகங்களில் கணக்காளராக கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதேச செயலக கணக்காளராக கே.றிஸ்வி யஹ்சர் நியமனம்.
Reviewed by Editor
on
March 04, 2021
Rating:
Reviewed by Editor
on
March 04, 2021
Rating:
