(சர்ஜுன் லாபீர்)
மார்ச் 2 - 3 வாரம் அரசினால் "சுபிட்சமான வாரம்" என பெயர் குறிப்பிட்டிருப்பதுடன் இவ்வாரத்தினுள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு உரிய பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
இதற்கமைய நாடுபூரகவும் இரண்டு லட்சம் குடும்பங்களை வலுவூட்டம் செய்வது தொடர்பாக எதிர்வரும் இரு வாரங்களில் வரிசை அமைச்சுக்களின் பிரதேச உத்தியோகத்தர்களுடன் சந்திப்பு மற்றும் பயிற்சிப்பட்றை நடாத்தப்படுதல் வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கிராம மட்ட குழுக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு (3) கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி தலைமையில் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.எம் சத்தார், எம்.எஸ்.நிசார், சப்றாஸ்மன்ஸூர்,சமீனா பரீட்கான்,தொழிலதிபரும்,அரசியல் பிரமுகருமான தேசமானிய ஏ.பி ஜெளபர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் உட்பட கிராம மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
"சுவிட்சமான வாரம்" செயலமர்வு!!!
Reviewed by Editor
on
March 04, 2021
Rating:
Reviewed by Editor
on
March 04, 2021
Rating:


