(றிஸ்வான் சாலிஹூ)
அரசாங்கத்தின் "சுபீட்சத்தின் நோக்கு" கருப்பொருளுக்கமைய நாட்டில் ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலை திட்டத்தின் கீழ், அக்கரைப்பற்று 20, 21 பொது வீதி(KVS Road) நிர்மாணப் பணிகள் அக்கரைப்பற்று மாநகர கௌரவ முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இன்று (22) திங்கட்கிழமை விசேட துஆ பிரார்த்தனையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினர்களான கௌரவ எஸ்.எம்.சபீஸ், கௌரவ எம்.ஐ.சஹாப்தீன், மாநகர சபையின் பிரதம பொறியியலாளர் ஜே.ஆகில், வீதி அபிவிருத்தி அதிகார சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச முக்கியஸ்தர்கள், சமூக நலன்விரும்பிகள், பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
