அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் "சுபீட்சத்தின் நோக்கு" தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை உருவாக்குதல் எனும் பிரதான தொனிப்பெருளின் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் மூன்றாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 49 விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை இன்று (23) பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. எம். சங்கீதன் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் திரு. எம்.எஸ்.எம். றஸ்ஸான் அவர்களின் வழிகாட்டலில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஏ.எம். தமீம் , நிருவாக உத்தியோகத்தர் திரு எம்.எஸ் பாறூக் ஆகியோரினால் நேர்முக தேர்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நேர்முக தேர்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எஸ். அப்துல் றஊப், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு ஏ.எல்.எம். றனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
