
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விமான வான் சாகச கண்காட்சியின் நிறைவு விழா இன்று (05) வெள்ளிக்கிழமை பிற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றது.
மூன்று தினங்களாக நடைபெற்ற வான் சாகச கண்காட்சி கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்நிகழ்வை இலங்கை விமானப்படை மற்றும் இந்திய விமானப்படை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
விமான வான் சாகச கண்காட்சியை பார்வையிடுவதற்கு பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான வான் சாகச கண்காட்சி பிரதமரின் தலைமையில்!!!
Reviewed by Editor
on
March 05, 2021
Rating:
Reviewed by Editor
on
March 05, 2021
Rating: