ஒன்பது ஜனாஸாக்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டது!!!



(முஹம்மட் அஸ்மி - ஏறாவூர்)

இன்று (05) மாலை நல்லடக்கம் செய்யப்பட்ட ஏறாவூர் ஜனாசாக்கள் இரண்டுடன் சேர்த்து காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்த 03ஜனாசாக்களும் , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்து 04ஜனாசாக்களும் என இதுவரை 09 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில்,

ஏறாவூர்- 02, சாய்ந்தமருது 02, மட்டக்களப்பு 01, காத்தான்குடி 01, அக்கரைப்பற்று 01, சம்மாந்துறை 01, அட்டாளைச்சேனை 01 என 09 ஜனாசாக்களும் இன்று இரவு 8.45 வரையான நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பணிகளை நேரடியாக பார்வையிடுவதற்காக ஒதுக்கப்பட்ட அடைக்கப்பட்ட பகுதிக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி அவர்களும், மரண விசாரணை அதிகாரி நசீர் ஹாஜியாரும் வருகை தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

ஒன்பது ஜனாஸாக்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டது!!! ஒன்பது ஜனாஸாக்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டது!!! Reviewed by Editor on March 05, 2021 Rating: 5