(முஹம்மட் முஜாஹித்)
அம்பாரை மாவட்ட செயலக பிரதம கணக்காளராக இலங்கை கணக்காளர் சேவையை சேர்ந்த எஸ்.எல்.ஆதம்பாவா நியமிக்கப்பட்டுளார்.
சம்மாந்துறைபைச் சேர்ந்த இவர் 1995 ஆம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவையில் இணைந்து கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வர்த்தகமாணியில் விஷேட பட்டத்தைப் பெற்ற இவர் பொது நிர்வாக முதுமாணி, பட்டயம் பெற்ற பொது நிதிக் கணக்காளர், இலங்கை பொது நிதிக் கணக்காளர்கள் சங்கம், கணக்காளர் உறுப்பினர் பட்டயம் பெற்ற பொது நிதி மற்றும் கணக்கியல் நிறுவனம், (ஐக்கிய இராச்சியம்) ஆகியவற்றில் தகைமை பெற்றுள்ளார்.
பொத்துவில் பிரதேச செயலகம், சம்மாந்துறை வலையக் கல்வி அலுவலகம், ஆகியவற்றில் கணக்காளராகவும் , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராகவும் (நிதி), கிழக்கு மாகாணம் முதலமைச்சர் செயலகம் கிழக்கு மாகாணம் மாகாண திறைசேரி ஆகியவற்றில் பிரதம கணக்காளராகவும், அம்பாறை மாவட்ட செயலகத்தில் பிரதம உள்ளக கணக்காய்வாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அம்பாரை மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளராக கடமையாற்றிய கணக்காளர் எம்.எம்.முஸ்தபா கிழக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டதையடுத்தே இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
March 16, 2021
Rating:
