(பாரூக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து போலி நாணயத்தாள்களுடன் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்.
அக்கரைப்பற்று பொலிஸார் நேற்றிரவு குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடென்றில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, இந்த சுற்றி வளைப்பின் போது நாணயத்தாள்கள் அச்சிடப்பயன்படுத்தப்படும் இயந்திரம், மை, பேப்பர் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கவும் அக்கரைப்பற்று பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Reviewed by Editor
on
March 16, 2021
Rating:
