பிரதமர் பங்களாதேஷ் நோக்கி பயணமானார்!


பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர் கௌரவ ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (19) வெள்ளிக்கிழமை காலை பங்களாதேஷ் நோக்கி பயணமானார்.

பிரதமர் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் யுஎல் 189 ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பங்களாதேஷ் நோக்கி பயணமாகும் இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது கௌரவ பிரதமர், பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்து கொள்ளவுள்ளார்.



பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்ட 'முஜிப் ஆண்டு' தொடர்பாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பிற்பகல் சிறப்பு உரையாற்றுவார்.கௌரவ பிரதமர் பிற்பகல் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

 இவ்விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் கௌரவ ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி அதிமேதகு முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பங்களாதேஷ் நோக்கி பயணமானார்! பிரதமர் பங்களாதேஷ் நோக்கி பயணமானார்! Reviewed by Editor on March 19, 2021 Rating: 5