கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவை!!! வீணாக குழம்ப வேண்டாம்.....


வெளிநாட்டிலிருந்து வருகை தருகின்றவர்களைத் தனிமைப்படுத்துவது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 2021.03.18 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமைவாக, சொல்லப்பட்டுள்ளவற்றில் பெரும்பாலானவர்களுக்கு அவசியமான விடயங்கள் வருமாறு,

A) COVID-19 இற்கெதிரான சிபாரிசு செய்யப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்று இரண்டு வாரங்களைக் கழித்தவர்கள் இலங்கைக்கு வரும் போது,

1.விமான நிலையத்தில் இருந்து அரச ஏற்பாட்டில் தனிமைப்படுத்தல் ஹோட்டல் அல்லது நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

2.முதலாவது நாள் பீ சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

3.பீ சி ஆர் பரிசோதனை முடிவில் தொற்றில்லை என்று தெரியவரின், விடுவிக்கப்படுவார்கள்.

4. வீடு செல்வதற்கு சொந்த போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.எனினும், போக்குவரத்தின் போது சுய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

5. வீட்டை சென்றடைந்தவுடன், தமது பகுதி சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

6. மேற்கொண்டு தனிமைப்படுத்தல் அவசியமில்லை.

7.வருகை தந்து ஏழாம் நாள் மீண்டும் பீ சி ஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.அதன் முடிவுக்கு ஏற்ற முறையில் தொடர்ந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

8.காய்ச்சல் அல்லது COVID-19 நோய்க்கு ஒப்பான நோய் அறிகுறிகள் தென்பட்டால், அது பற்றி உடனடியாக தமது பகுதி சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

9. பீ சி ஆர் பரிசோதனை முடிவு தொற்றுள்ளதாக தெரியவரின், சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

B. a) தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது தடுப்பூசி பெற்று இரண்டு வாரங்கள் பூரணமாகாதவர்கள் தனிமைப்படுத்தல் ஹோட்டலில் தனி அறையில் தனியாக அல்லது குடும்பமாக தனிமைப்படுத்தலில் இருக்கும் பட்சத்தில்:

1. வருகை தந்து முதலாம், ஏழாம் நாட்களில் பீ சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

2. இரண்டு முடிவுகளும் தொற்றில்லை என்று தெரியவரின், விடுவிக்கப்படுவார்கள்.

3. வீடு செல்வதற்கு சொந்த போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.எனினும், போக்குவரத்தின் போது சாரதி உட்பட சுய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

4. வீட்டை சென்றடைந்தவுடன், தமது பகுதி சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

5. பதினான்கு நாள் தனிமைப்படுத்தலின் எஞ்சிய நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

6.காய்ச்சல் அல்லது COVID-19 நோய்க்கு ஒப்பான நோய் அறிகுறிகள் தென்பட்டால், அது பற்றி உடனடியாக தமது பகுதி சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

7. பீ சி ஆர் பரிசோதனை முடிவு தொற்றுள்ளதாக தெரியவரின், சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

B. b) தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது தடுப்பூசி பெற்று இரண்டு வாரங்கள் பூரணமாகாதவர்கள் தனிமைப்படுத்தல் ஹோட்டலில் கூட்டமாக அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலில் இருக்கும் பட்சத்தில்:

1. வருகை தந்து முதலாம், பத்தாம் நாட்களில் பீ சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

2. இரண்டு முடிவுகளும் தொற்றில்லை என்று தெரியவரின், விடுவிக்கப்படுவார்கள்.

3. வீடு செல்வதற்கு சொந்த போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.எனினும், போக்குவரத்தின் போது சாரதி உட்பட சுய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

4. வீட்டை சென்றடைந்தவுடன், தமது பகுதி சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

5.பதினான்கு நாள் தனிமைப்படுத்தலின் எஞ்சிய நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

6. காய்ச்சல் அல்லது COVID-19 நோய்க்கு ஒப்பான நோய் அறிகுறிகள் தென்பட்டால், அது பற்றி உடனடியாக தமது பகுதி சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

7. பீ சி ஆர் பரிசோதனை முடிவு தொற்றுள்ளதாக தெரியவரின், சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

(மக்களை குழப்பாமல் தகவல்களை உரியமுறையில் தெரியப்படுத்துவதும் எம் எல்லோரினதும் கடமையாகும்)


டாக்டர் நாகூர் ஆரிப் (D N A)

 

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவை!!! வீணாக குழம்ப வேண்டாம்..... கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவை!!! வீணாக குழம்ப வேண்டாம்..... Reviewed by Editor on March 19, 2021 Rating: 5