வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் இன்று (17) புதன்கிழமை காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட நபரொருவரின் சடலம் ஓட்டமாவடி ஆற்றில் மீட்கப்பட்டுள்ளது.
தோணி ஒன்றில் சென்ற நபரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. மரணமடைந்த நபர் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சேகு இஸ்மாயில் சப்ராஸ் (மீனி) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டமாவடி சப்ராஸின் உடல் ஆற்றிலிருந்து மீட்பு!!!
Reviewed by Editor
on
March 17, 2021
Rating:
Reviewed by Editor
on
March 17, 2021
Rating:
