(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை சூழலை கட்டமைத்தல் மற்றும் அழகுபடுத்தல் தொடர்பான துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று (18) வியாழக்கிழமை காலை அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலகம்,கரையோர பாதுகாப்பு திணைக்களம்,மீன்பிடி கடல்வள முகாமைத்துவ திணைக்களம்,247 வது படைப்பிரிவு என்பனவற்றின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு அக்கரைப்பற்று கடற்கரை சூழலை கட்டமைத்தல் மற்றும் அழகூட்டுதல் தொடர்பாக முதல்வருடன் பரஸ்பரம் கலந்துரையாடினர்.
இதன் போது அக்கரைப்பற்று கடற்கரையை இன்னும் அழகு நிறைந்த இடமாக மாற்றுதல், துப்பரவு பேணுதல், பொது மக்கள் பாவனைக்கு இடையூறு இல்லாத வகையில் ஒழுங்கமைத்தல், மீனவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தல், கடல் சார் சூழலை பசுமையாக்கல், கடற்கரை பகுதியை அண்டிய பொது மக்களின் பொருளாதார கட்டமைப்பை ஊக்குவித்தல்,மண்ணரிப்பில் இருந்து தடுத்தல், நமது கடற்கரையை பொதுமக்கள் ஆரோக்கியம் பேணும் சுகாதார உடற்பயிற்சிகளுக்கு பொருத்தமான ஸ்தலமாக கட்டமைத்தல்,மற்றும் தொடர்ச்சியாக கடற்கரை பிரதேசதங்களில் சிரமதானப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடற்கரை சூழலை அழகுபடுத்த துறைசார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் ஸகி கலந்துரையாடல்..!
Reviewed by Editor
on
March 18, 2021
Rating:
Reviewed by Editor
on
March 18, 2021
Rating:


