வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களை கொவிட் வைரஸ் காரணமாக விரைவாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தனிமைப்படுத்தல் வசதிகளை இலவசமாக வழங்குவதற்காக பத்து தனியார் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய கொவிட் ஒழிப்பு செயலணியின் அனுமதியுடன் அவை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பத்து ஹோட்டல்களிலும் ஒரே தடவையில் 571 பேரை தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் உள்ளன. ஹோட்டல் கட்டணம், உணவு உட்பட ஏனைய சகல வசதிகளும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக வழக்கப்படும்.
இதற்காக வாரம் ஒன்றிற்கு 18 மில்லியன் ரூபா செலவாகும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
March 26, 2021
Rating:
